முனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக்கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதியபடமான பரதேசி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங்கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கிறது. இதனால் அம்மணி ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தாண்டு எனக்கு ஆரம்பமே சிறப்பாக அமைந்து இருக்கிறது. முதலாவதாக பானம் படத்திற்காக ஆந்திர விருது, அப்புறம் டைரக்டர் பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்தது, புதிதாக வீடு வாங்கியிருப்பது என்று அமர்க்களமாய் அமைந்துள்ளது. பாலா சார் படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரள போகிறார்கள். இதுவரை நான் நடித்திராத ஒரு ரோல் இந்தபடத்தில் எனக்கு கிடைத்து இருக்கிறது. படத்தில் என்னுடைய தோற்றம், பேச்சுவழக்கு, உடலமைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதேசமயம் மிரளவும் செய்யும் என்றார். மேலும் கோலிவுட்டில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment