சின்னத்திரையில் இடம்பெரும்
மருத்துவம், ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு சவுக்கடி கொடுக்கும்
வகையில் புதிய படமொன்று தயாராகி வருகிறது. கலப்படம் என்ற பெயரில் உருவாகும்
இப்படத்தை டைரக்டர் டி.ஆர். இயக்குகிறார். நாயகனாக விஜய் ஆதிக்கும்,
நாயகியாக கோஸ்ரீயும் அறிமுகமாகிறார்கள். படத்தில் இடம்பெறும் நாயகி
கோஸ்ரீயின் கவர்ச்சி காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று
பட யூனிட்டை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
டைரக்டர் டி.ஆர்., கூறுகையில், சின்னத்திரையில் வரும் பெரும்பாலான மருத்துவர்களும், ஜோதிடர்களும் நம்பிக்கை தருவதற்கு பதிலாக பயமுறுத்தி விட்டுப் போய் விடுகிறார்கள். இவர்களால் பாதிக்கப் பட்டவர்கள் புது எழுச்சியுடன் மீண்டும் தன்னம்பிக்கை மனிதர்களாக மாறுவதே கலப்படம் படத்தின் கதைக்களம், என்றார். படத்தின் சூட்டிங்கை கொடைக்கானலில் ஒரே ஷெட்யூலில் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.